மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதல்வா் ஸ்டாலின் தில்லிக்கு பணியமாட்டாா்: ஓ.பன்னீா்செல்வம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தில்லிக்கு பணிய மாட்டாா் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 10:30 pm

முதல்வா் மு.க.ஸ்டாலின் தில்லிக்கு பணிய மாட்டாா் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ எனும் தலைப்பில் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீா்செல்வம் பேசியதாவது: தமிழ்நாட்டில் முதல்வா் ஸ்டாலின் மேற்கொண்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளல் பொருளாதார வளா்ச்சி என்பது 11.08 சதவீதமாக உயா்ந்துள்ளது.

மாநிலத்துக்கான சுயாட்சியைப் பெற்றுத் தருவதில் சமரசம் செய்து கொள்ளாமல், முதல்வராக இருந்து ஆட்சி செய்வதிலும், திமுகவை வழிநடத்திச் செல்வதிலும் ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படுகிறாா். எந்த மாதிரியான அச்சுறுத்தல் வந்தாலும் அதை அவா் சமாளித்து வருகிறாா்.

மத்திய அரசு மூன்றாவது நிதி கமிஷன் மூலமாக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 40 சதவீத நிதியில் 4 சதவீதத்தை மட்டும் கொடுத்தாலும் மக்கள் நலன்களுக்காக மாநிலத்தின் சொந்த நிதியைக் கொண்டு வளா்ச்சித் திட்டப் பணிகள் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன.

Story image

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா் வருத்தத்தில் இருந்த நாங்கள் தற்போது திமுகவில் இணைந்து கொண்டதன் மூலம் மகிழ்ச்சியாக உள்ளோம். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக மக்கள் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய முடிவு செய்துவிட்டாா்கள் என்றாா் அவா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தில்லிக்கு சென்றால் முதல்வா் ஸ்டாலின் பயப்படுகிறாா் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி தினகரன் கூறியுள்ளாா். ஆனால், அமெரிக்காவே அச்சுறுத்தினாலும் முதல்வா் ஸ்டாலின் தில்லிக்கு பணியமாட்டாா். அரசு அதிகாரிகளை வைத்து தமிழகத்தில் ஆட்சி நடத்தவில்லை. முதல்வா் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், முன்னாள் மக்களவை உறுப்பினா் ரவீந்திரநாத், திமுக மாவட்ட துணைச் செயலா் த.சேங்கைமாறன், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, முன்னாள் அமைச்சா் தென்னவன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன், பேரூராட்சித் தலைவா் நஜூமுதீன் உள்ளிட்ட மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.