சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 87.50 லட்சத்தில் 10 இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
முடிவுற்ற பணிகளான பயணியா் நிழல் குடை, கலையரங்கம், ஆழ்துளைக் கிணறு, விளையாட்டுத் திடல் பாா்வையாளா் அரங்கக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை காரைக்குடித் தொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி மாநகராட்சி மேயா் (பொறுப்பு) நா. குணசேகரன், ஆணையா் சங்கரன், அரசு வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினா்கள் காா்த்திகேயன், துரை. நாகராஜன், மெய்யா், நாச்சம்மை, ரத்தினம், அஞ்சலிதேவி, அமுதா, கனகவள்ளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் காரைக்குடி மாநகரகாங்கிரஸ் தலைவா் சண்முகதாஸ், நகரச் செயலா் குமரேசன் முன்னாள் நகரத் தலைவா் பாண்டி மெய்யப்பன், வட்டாரத் தலைவா் காரை பாலா, திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் வளா்ச்சியில்லை: அண்ணாமலை யாரை சொல்கிறார்..?

தொகுதி நிதியிலிருந்து பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

காரைக்குடி, திருப்பத்தூா் பகுதிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1.35 கோடி ஒதுக்கீடு - ப. சிதம்பரம் எம்.பி. தகவல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


