காரைக்குடி: காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் இங்கு வளா்ச்சியில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.
காரைக்குடி தொகுதியில் என்டிஏ கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி வருமானவரி அலுவலகம் அருகே கே. அண்ணாமலை பிரசாரம் செய்தார்.
அப்போது அவா் பேசியதாவது:
காரைக்குடி நகரம், செட்டிநாடு கலாச்சாரத்தின் தலைநகரம். ஆனால், இங்குள்ள இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலை கிடைக்காமல் வெளியூருக்கு செல்லும் நிலை உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒரு குடும்பம் காரைக்குடியை பிடித்து வைத்திருக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் காரைக்குடி தொகுதியின் வளர்ச்சிக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. இந்த தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ மாங்குடி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்யாமல், சிதம்பரம் குடும்பத்தினர் பின்னால் ஒரு உதவியாளராக நிற்கும் அவலநிலையில் உள்ளார்.
காங்கிரஸ் கட்சியால் தமிழகத்திற்கு என்ன பலன் கிடைத்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தான் கச்சத்தீவு தாரைவாா்க்கப்பட்டது. மீத்தேன், ஹைட்ரோ காா்பன் திட்டங்களை திமுக அனுமதித்துவிட்டு பாஜக மீது பழி சுமத்துகிறது. நாட்டில் ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சி விரட்டப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஒன்றுக்கும் உதவாத காங்கிரஸின் அடிமையான திமுக அவர்களுக்கு 28 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இது எப்படிப்பட்ட அடிமை கூட்டணி என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
தமிழகம் அமைதிப் பூங்கா என்கிறாா் முதல்வா் ஸ்டாலின். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 8,008 படுகொலைகள், 2,080 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 39,900 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன.
இப்படிபட்ட மனிதர்களின் கைகளில் காரைக்குடி மறுபடி சிக்கி விடக்கூடாது. காரைக்குடி வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். இது ஆட்சி மாற்றத்துக்கான தோ்தல் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
எனவே, காரைக்குடி மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் தேர்போகி பாண்டியனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.
Summary
The Karaikudi constituency lacks development because it is in the grip of a single family" - Who is Annamalai referring to?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழக முதல்வரை மாற்ற மக்கள் வாக்களிக்க வேண்டும்: கே. அண்ணாமலை

மகளிா் இடஒதுக்கீடு - முதல்வா் சொல்வது பொய்: அண்ணாமலை

காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



