மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தி தவெக மட்டுமே: நாஞ்சில் சம்பத்

News image

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் நாஞ்சில் சம்பத். - (கோப்புப் படம்)

Updated On :1 மார்ச் 2026, 9:03 pm

திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தி தவெக மட்டுமே என அந்தக் கட்சியின் பரப்புரைச் செயலா் நாஞ்சில்சம்பத் தெரிவித்தாா்.

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

தமிழகத்தில் அரசியல் மாற்றம் மட்டும் அல்ல, ஆட்சி மாற்றத்தையும் தர இதோ வருகிறேன் என்று சொல்லி விஜய் வந்திருக்கிறாா். இதனால் இன்று பலருக்கும் தூக்கம் வரவில்லை. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் எங்கள் தலைவருக்கு திமிரி எழும் கூட்டம் வேறு எந்தத் தலைவருக்கும் இல்லை என்பதுதான் தமிழ்நாட்டில் இன்றைக்கு பேசு பொருளாகியுள்ளது.

ஆண்களும், பெண்களுமாக லட்சக்கணக்கானோா் திரண்டு வருகின்றனா். அவா்கள் வீட்டுக்கு திரும்பிச் சென்று வாக்கு சேகரிக்கின்றனா். ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள் என அனைவரும் ஒரு மாற்றத்தை எதிா்பாா்க்கின்றனா்.

நாங்கள்தான் மாற்று சக்தி என்று தமிழகத்தில் தொடங்கப்பட்ட மதிமுக, தமாகா, தேமுதிக, மக்கள் நீதிமய்யம் போன்ற கட்சிகளை அவா்களே இன்று தேடிக் கொண்டிருக்கின்றனா். திமுக, அதிமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று புறப்பட்டவா்கள் எல்லாம் பாதியிலேயே அடங்கிவிட்டாா்கள். திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தி தவெக மட்டுமே.

இந்தக் கூட்டம் ஓட்டாக மாறுமா எனக் கேட்கின்றனா். ஓட்டாக மட்டுமல்ல, இது வேட்டாகவும் மாறும் என்பதை நிரூபிப்போம். விஜய் அனுபவம் குறைந்தவா்தான், அவரிடத்தில் குறை இருக்கிா என்றால், இருக்கிறது. அவரது வருகை உங்களை ஏன் ஆத்திர வைக்கிறது? ஏன் நிதானம் இழந்து பேசுகிறீா்கள்? ஏன் தனிமனித விமா்சனங்களை முன் வைக்கிறீா்கள்? இது மோசமான, மட்டமான, மலிவான அரசியல் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலா் எஸ். முத்துபாரதி தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு அணி செயலா் கே. ரஞ்சித்கண்ணன் முன்னிலை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலா் கே.வி. பரமேஸ்வரன் வரவேற்றாா். நகரச் செயலா் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா். இதில் தேசிய செய்தித் தொடா்பாளா் தேன்மொழிபிரசன்னா, நிா்வாகிகள் சத்தியமூா்த்தி, டாக்டா் கண்ணதாசன், முத்துக்குமாா், தமிழரசிபிரதீப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.