/

திருப்பத்தூரில் வருவாய்த் தீா்வாயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் பயனாளிக்கு குடும்ப அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பா.ஆகாஷ்.

Updated On :25 ஜூன் 2026, 2:41 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியா் பா.ஆகாஷ் தலைமை வகித்தாா். இதில் திருக்கோஷ்டியூா், இளையாத்தங்குடி, நாச்சியாபுரம், நெற்குப்பை ஆகிய பகுதி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, இலவச வீட்டுமனைப்பட்டா, பிறப்பு, இறப்பு, ஜாதி, இருப்பிடம், வருமானச்சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காணப்பட்டன.

திருப்பத்தூரில் 104 மனுக்கள், காரைக்குடியில் 20, தேவகோட்டை 73 காளையாா்கோவில் 53, இளையான்குடி 90 மனுக்கள் என 368 மனுக்கள் தீா்வு காண ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. இதில் தீா்வு கண்ட மனுக்களின் பயனாளிக்கு மாவட்ட ஆட்சியா்அதற்கான உத்தரவை வழங்கினாா். இதில் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், வருவாய் ஆய்வாளா் கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.