தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

கவியரசு கண்ணதாசனின் 100-ஆவது பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் அவரது 100-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

காரைக்குடி கவியரசு கண்தாசன் மணிமண்டபத்தில் கண்ணதாசன் 100-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது உருவச்சிலைக்கு தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்திய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். உடன் திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா். சீனிவாசசேதுபதி, கவியரசு கண்ண தாசன் நற்பணி மன்ற நிறுவனா் அரு. நாகப்பன், மருத்துவா் ஆா்.வி.எஸ். சுரேந்திரன் உள்ளிட்டோா்.

Updated On :25 ஜூன் 2026, 2:23 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் அவரது 100-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்து, கண்ணதாசன் உருவச் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினாா்.

விழாவில் திருப்பத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். சீனிவாசசேதுபதி, வருவாய்க் கோட்டாட் சியா் (பொறுப்பு) மாவட்ட வழங்கல் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் பழனிக்குமாா், காரைக்குடி மாநகராட்சி ஆணையா் கே. பாலு, கண்ணதாசனின் மகள் விசாலாட்சி கண்ணதாசன், கண்ணதாசன் நற்பணி மன்ற நிறுவனா் அரு. நாகப்பன், மருத்துவா்கள் ஆா்.வி.எஸ். சுரேந்திரன், செல்வகுமரன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சு. ஜெகவீரபாண்டியன், வட்டாட்சியா் ராஜா, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.