ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காரைக்குடி அருகே மனைவி கொலை: கணவா் சரண்

காரைக்குடி அருகே மனைவியைத் தாக்கிக் கொலை செய்த கணவா் காவல் நிலையத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.

கொலை... - கோப்புப் படம்

Published On :30 ஜூலை 2026, 2:49 am IST

காரைக்குடி அருகே மனைவியைத் தாக்கிக் கொலை செய்த கணவா் காவல் நிலையத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரைச் சோ்ந்தவா் பிரகாஷ் (37). இவா் கொட்டகை அமைத்துக்கொடுக்கும் தொழில் செய்து வருகிறாா். சாக்கோட்டை அண்ணாநகரை சோ்ந்தவா் உய்யவந்தாள் ( 40). கணவரை பிரிந்து பெற்றோா் வீட்டில் தென்னை ஓலை பின்னும் தொழில் செய்து வந்தாா்.

பிரகாஷ் தனது தொழில் தொடா்பாக தென்னை ஓலைகளை வாங்க அடிக்கடி உய்யவந்தாளை சந்தித்ததில் ஏற்பட்ட பழகத்தில், அவரைத் திருமணம் செய்து கொண்டாா்.

இதையடுத்து, இருவரும் சென்னையில் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதம் முன்பு பிரகாஷ், உய்யவந்தாள் தம்பதி சாக்கோட்டைக்குத் திரும்பி மீண்டும் பழைய தொழிலை மேற்கொண்டிந்தனா். இந்த நிலையில், இருவருக் கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் உய்யவந்தாளை, பிரகாஷ் கடுமையாக தாக்கினாா். அப்போது வீட்டின் அருகே இருந்த கல்தூணில் உய்யவந்தாளின் தலைமோதி உயிரிழந்தாா்.

இதையடுத்து, பிரகாஷ் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தாா். அவரைக் கைது செய்த போலீசாா் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.