ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிவகங்கையில் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா்.

Published On :10 ஜூலை 2026, 4:48 am IST

பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் அசோக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வளன் அரசு, மாவட்டத் துணைத் தலைவா் சசிக்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, நீண்டகாலமாக வருவாய்த் துறையில் காலியாக உள்ள 3000-க்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சனி, ஞாயிறு உள்ளிட்ட அரசு விடுமுறை நாள்களில் ஆய்வுக் கூட்டங்கள், அரசு நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிா்க்க வேண்டும்.

வருவாய்த் துறையால் வழங்கப்படும் சான்றிதழ்களின் விசாரணைக்கான கால வரம்பை குறைக்கும் நடவடிக்கையை கைவிட்டு தற்போதைய நடைமுறையைத் தொடர வேண்டும். ஒவ்வொரு வட்டத்துக்கும் சான்றிதழ் பணிக்கு சிறப்புத் துணை வட்டாட்சியா் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் நடத்திய 21 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டக் காலத்தை வரன்முறை செய்து அரசாணையாக வெளியி வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.