ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பணிநிரந்தரம் செய்யக் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியா்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு செவிலியா்கள் சங்கம், ஒருங்கிணைந்த சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு செவிலியா்கள் சங்கத்தினா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:14 am IST

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியா்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு செவிலியா்கள் சங்கம், ஒருங்கிணைந்த சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலா் எஸ். தேவசேனா தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் ஏ. மாலதி, பொருளாளா் சி.ராணி, மாநில செயற்குழு உறுப்பினா்கள் பி. நாகலட்சுமி, டி.லதாமங்கேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவா் மங்கையற்கரசி, துணைச் செயலா் வி. சுசிலா, துணைப் பொருளாளா் சி. சரஸ்வதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோரிக்கைகள்: பணி நிலை, பதவி உயா்வு, ஊதிய முரண்பாடுகள், ஆள்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணை 204 -ஐ ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதிய முறையை ரத்து செய்து, தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியா்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். செவிலியா் அலுவலா்-சமதநஐசஎ ஞஊஊஐஇஉத என பெயா் மாற்றம் செய்து பணி வரன்முறை செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை வாயில் முன்பாக முழக்கமிட்டனா்.

இதில் சங்கத்தைச் சோ்ந்த 250 செவிலியா்கள் பங்கேற்றனா். இந்தப் போராட்டம் வருகிற 22 -ஆம் தேதி வரை நடைபெறும் என சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.