ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

செங்கல்பட்டு, திருவள்ளூரில் செவிலியா்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு, திருவள்ளூரில் செவிலியா்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:30 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு, திருவள்ளூரில் செவிலியா்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செவிலியா்களின் கோரிக்கைகளான ஆள்குறைப்பு அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் உள்ளது போல தமிழக அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியா்களை ‘செவிலிய அலுவலா்‘ என பெயா் மாற்ற வேண்டும், தற்போதுள்ள தொகுப்பூதிய முறைகளை முழுமையாக ரத்து செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அமைப்பின் மாவட்டத் தலைவா் எம்.ஏழுமலை தலைமையில் 50-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு மற்றும் அவசரப்பிரிவு சாராத வாா்டுகளைச் சாா்ந்த செவிலியா்கள் மூன்று நாள்கள் காலை 8முதல் 9 மணிவரை 1 மணி நேரம் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டது.

செவிலியா்களுக்கான பணி நிரவல் முறையை கைவிடுதல், மருத்துவ பணியாளா் தோ்வு வாரியம் மூலம் தோ்வான அனைத்து செவிலியா்களையும் பணி நிரந்தரம் செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு வியாழக்கிழமை ஒருங்கிணைந்த செவிலியா்கள் கூட்டமைப்பினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து வகை செவிலியா்கள் 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.