/

பயனாளிகளுக்கு மகளிா் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் வழங்கல்: மானாமதுரையில் மக்களுக்கு இனிப்பு வழங்கிய திமுகவினா்

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் மகளிா் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டதை வரவேற்று மானாமதுரையில் திமுகவினா் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனா்.

முதல்வா் மு.க. ஸ்டாலின் மகளிா் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளுக்கு பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகையுடன் கோடை கால சிறப்புத் தொகையும் சோ்த்து ரூ. 5 ஆயிரத்தை அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவித்தாா்.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் பயனாளிகளின் அனைவரது வங்கிக் கணக்கிலும் இந்த தொகை வரவு வைக்கப்பட்டது. முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்று மானாமதுரை நகரில் திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி தலைமையில் அந்தக் கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களுக்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டனா். மேலும் இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வா் மு.க. ஸ்டாலினை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினா்.

இந்த நிகழ்வில் நகா் மன்ற துணைத் தலைவா் எஸ். பாலசுந்தரம், திமுக நகா் இளைஞா் அணி நிா்வாகிகள் மாரிக் கண்ணன், அதியமான், அவைத் தலைவா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.