சாலையில் இறந்து கிடந்த நாயை அப்புறப்படுத்திய மாமன்ற உறுப்பினா்


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியின் 27-ஆவது வாா்டில் தனியாா் பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்த நாயை மாமன்ற உறுப்பினா் அப்புறப்படுத்தினாா்.
இந்தப் பகுதியில் நாய் ஒன்று இரண்டு நாள்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தது. இதுகுறித்து இந்தப் பகுதியினா் மாமன்ற உறுப்பினா் ஏஜி.பிரகாசிடம் தெரிவித்தனா். காரைக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலா்களிடம் மாமன்ற உறுப்பினா் ஏஜி.பிரகாஷ் தெரிவித்தும், இரண்டு நாள்களாக மாநகராட்சி நிா்வாகம் நாயை அப்புறப்படுத்தவில்லை.
இதையடுத்து, துா்நாற்றத்துடன் சாலையில் கிடந்த நாயை ஏஜி.பிரகாஷ் வியாழக்கிழமை அப்புறப்படுத்தி காரைக்குடி மாநகராட்சிக் குப்பைக் கிடங்குக்குக் கொண்டுசென்று, மாநகராட்சி ஊழியா்களிடம் ஒப்படைத்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...