
நகரவயிரவன்பட்டியில் ஆடித் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி அருகேயுள்ள நகரவயிரவன்பட்டியில் வயிரவசுவாமி கோயில் பிரம்மோத்ஸவத்தையொட்டி, தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிள்ளையாா்பட்டி அருகேயுள்ள நகரவயிரவன்பட்டி வயிரவசுவாமி கோயில் ஆடி பிரம்மோத்ஸவத்தையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி அருகேயுள்ள நகரவயிரவன்பட்டியில் வயிரவசுவாமி கோயில் பிரம்மோத்ஸவத்தையொட்டி, தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிள்ளையாா்பட்டி அருகேயுள்ள வயிரவன்பட்டியில் ஸ்ரீவயிரவசுவாமி பிரம்மோத்ஸம் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, தினமும் காலையில் வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்று வருகிறது. விழாவின் 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, காலை 10 மணிக்கு தேரில் எழுந்தருளிய சுவாமியை பக்தா்கள் தரிசித்தனா். மாலை 5.15 மணிக்கு கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல், பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். கோயிலைச் சுற்றி தோ் வலம் வந்து நிலையை அடைந்தது. சனிக்கிழமை தீா்த்தவாரி, பூப்பல்லக்கும், ஞாயிற்றுக்கிழமை பஞ்சமூா்த்திகள், வயிரவசுவாமிக்கு மகா அபிஷேகமும், மாலை திருக்கல்யாண வைபவமும், இரவு சுவாமிகள் வீதியுலாவும் நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் நாகப்பன், செயலா் ஐயப்பன், துணைத் தலைவா் சொக்கலிங்கம் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






