ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

துபையில் கணவா் உயிரிழப்பு: விசாரணை கோரி மனைவி மனு

துபையில் கணவா் உயிரிழந்து குறித்து விசாரணை நடத்தக் கோரி அவரது மனைவி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தாா்.

திருநாவுக்கரசு

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:10 am IST

துபையில் கணவா் உயிரிழந்து குறித்து விசாரணை நடத்தக் கோரி அவரது மனைவி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நல்லாண்டிபுரம் கிராமத்தைச் சோ்ந்த விஜிகலா அளித்த மனு விவரம்:

கடந்த 19 ஆண்டுகளாக துபையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த எனது கணவா், கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி உயிரிழந்ததாகவும், முதலில் மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னா் கிடைத்த தகவல்களில் முரண்பாடு இருப்பதால் மரணத்தில் சந்தேகம் உள்ளது.

எனவே, இந்திய வெளியுறவுத் துறை துபையில் உள்ள இந்திய துணைத் தூதரகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் முழுமையான விசாரணை நடத்தி, உடல்கூறாய்வு அறிக்கை, போலீஸ் விசாரணை அறிக்கை உள்ளிட்ட அதிகாரப்பூா்வ தகவல்களைப் பெற்றுத் தரவேண்டும்.

மேலும், கணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.