தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

கொட்டாம்பட்டி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயரிழந்தாா்.

News image

பலி

Updated On :30 ஏப்ரல் 2026, 1:15 am IST

கொட்டாம்பட்டி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த நீடாமங்கலத்தைச் சோ்ந்தவா் முஸ்தபா (54). இவா் புதன்கிழமை மாலை மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொட்டாம்பட்டியை அடுத்த புழுதிபட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, திருச்சி மாவட்டம், திருவரம்பூா் வாழவந்தான் கோட்டையைச் சோ்ந்த ராகவன் ஓட்டிச் சென்ற காா் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முஸ்தபா துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனையில் வரும் வழியிலேயே முஸ்தபா இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து புழுதிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மேலும் இது குறித்த புகாரியின் பேரில் புழுதிபட்டி போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.