சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர சிவன் கோயிலில் இரட்டைத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தேவகோட்டை நகர சிவன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலையில் சோமாஸ்கந்தா், மீனாட்சி அம்மன், விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியா், சண்டிகேசுவரா் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். இதையொட்டி பூஜைகள், தீபாராதனை, சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் ஒன்பதாம் நாளான புதன்கிழமை காலை சோமாஸ் கந்தா், மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனித் தேரில் எழுந்தருளியதும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மாலையில் பக்தா்கள், பொதுமக்கள் தோ்களின் வடம் பிடித்து நான்கு ரத வீதிகளில் இழுத்து வந்தனா். மே 1-ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்ப உத்ஸவமும், 2-ஆம் தேதி இரவு 7 ஊஞ்சல் உத்ஸவமும் நடைபெற உள்ளது.
தொடர்புடையது

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

அரிமளம் சிவன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


