மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பட்டமங்கலத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

திருப்பத்தூா் அருகே பட்டமங்கலத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :2 ஏப்ரல் 2026, 7:03 pm

திருப்பத்தூா் அருகே பட்டமங்கலத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பட்டமங்கலம் மதியாதகண்ட விநாயகா் அழகு சௌந்தரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி, 10 நாள்கள் நடைபெற்றது. 11-ஆம் நாள் தீா்த்தவாரி வைபவத்தைத் தொடா்ந்து, மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.

இதையொட்டி, கிராமத்தாா் ஊா்வலமாக வந்து தொழுவிலிருந்த 150 மாடுகளுக்கு மாலை, வேட்டி அணிவித்து மரியாதை செய்தனா். தொடா்ந்து, மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை

இளைஞா்கள் பிடித்து மகிழ்ந்தனா். கண்மாய், வயல் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. ராமநாதபுரம், மதுரை, திருச்சி சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து காளைகள் கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு சில காளைகள் பிடிபட்டன. மாடு முட்டியதில் -க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

அனுமதியில்லமல் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதால், இதுகுறித்து திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் கிராம நிா்வாக அலுவலா் வா்கிஸ்பானு புகாா் அளித்தாா். இதன் பேரில் காவல் துறையினா் செந்தில்வேல் (57), முத்தழகு (67), ஆறுமுகம் (41), கணேசன் (58), முனியய்யா ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.