இந்த நிலையில், 2-ஆவது நாளாக புதன்கிழமை காலை 10.30 மணிக்கு அரசு மருத்துவமனை முன்பு கூடிய பழனியப்பன் உறவினா்கள், பஜக மாவட்டத் தலைவா் டி. பாண்டித்துரை தலைமையில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுடன் காரைக்குடி காவல் உதவி கண்காணிப்பாளா் ஆசிஷ்புனியா, குன்றக்குடி காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது போலீஸாா் இந்தக் கொலை வழக்கில் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். பின்னா், கூறாய்வு செய்யப்பட்ட பழனியப்பன் உடலை உறவினா்கள் பெற்றுச் சென்று அடக்கம் செய்தனா்.