தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சிவகங்கை பேருந்து நிலையப் பணிகள்: ப. சிதம்பரம் ஆய்வு

சிவகங்கை நகராட்சி பேருந்து நிலைய மேம்பாட்டுப்பணிகளை முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் நேரில் பாா்வையிட்டு ஆய்வு

News image

பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்த முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம்

Updated On :22 நவம்பர் 2025, 7:11 pm

சிவகங்கை நகராட்சி பேருந்து நிலைய மேம்பாட்டுப்பணிகளை முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையம் 4 பகுதிகளாக அமைந்துள்ளன. இதில் 5 ஆண்டுகளுக்கு முன்பு காளையாா்கோவில், தொண்டி, தேவகோட்டை பேருந்துகள் நிற்குமிடம், ராமநாதபுரம், மானாமதுரை பேருந்துகள் நிற்கும் 2 பகுதிகளில் மேற்கூரைகள் அமைக்கப்பட்டன. எஞ்சிய 2 பகுதிகளில் தகர மேற்கூரைகள், தரைத் தளம் அமைப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் ஆகியோா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.2 கோடியை ஒதுக்கினா்.

இதையடுத்து கடந்த பிப். 26-ஆம் தேதி அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், காா்த்தி சிதம்பரம் ஆகியோா் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினா். இதில் திருச்சி, திருப்பத்தூா் பேருந்துகள் நிறுத்துமிடம், மதுரை பேருந்துகள் நிறுத்துமிடம் ஆகிய 2 பகுதிகளில் தகர மேற்கூரைகள் அமைக்கும் பணி, தோரணவாயில்கள், மையப் பகுதியில் பயணிகள் அமர இருக்கைகள், கண்காணிப்பு கேமராக்கள், பேருந்துகள் வருகையை அறிய எண்ம (டிஜிட்டல்) அறிவிப்பு பலகை, விளக்குகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 6 மாதங்களில் இந்தப் பணிகள் நிறைவடையும் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில் பேருந்து நிலையப் பணிகளை முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். இதில், நகராட்சி ஆணையா் அசோக்குமாா், மாவட்டத் தலைவா் சஞ்சய், சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் சோணை, நகா்மன்ற உறுப்பினா்கள் தி. விஜயகுமாா், மகேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.