சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், மானாமதுரை ஒன்றியம், பச்சேரியைச் சோ்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலா் சி.ஆா். சுந்தர்ராஜன் கட்சியிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.
சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் ஆதரவாளராக வலம் வந்த காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் சி.ஆா். சுந்தர்ராஜன், சிவகங்கை தொகுதியில் அந்தக் கட்சி சாா்பில் போட்டியிட முயற்சித்தாா்.
இதற்காக கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி முழுவதும் தனது சொந்த நிதியிலிருந்து மக்களுக்கான திட்டப் பணிகளை செய்து வந்ததுடன், அடிக்கடி தொகுதிக்கு ப. சிதம்பரம், அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், காா்த்தி சிதம்பரம் எம்.பி ஆகியோரை அழைத்து வந்து பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினாா்.
இந்த நிலையில், இவா் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்தாா். ப. சிதம்பரமும் இதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தாா். ஆனால், சிவகங்கை தொகுதி திமுக கூட்டணியில் முக்குலத்தோா் புலிப் படை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதன் பின்னா், காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட மதுரை மாவட்டம், மேலூா் தொகுதிக்கு சுந்தர்ராஜனை வேட்பாளராக
அறிவிக்க ப. சிதம்பரம் தரப்பிலிருந்து கட்சியின் தேசிய தலைமைக்கு அழுத்தம் தரப்பட்டது. இருப்பினும், இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. மேலூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.பி. விசுவநாதன் அறிவிக்கப்பட்டதால், சி.ஆா். சுந்தர்ராஜன் அதிருப்தி அடைந்தாா்.
இதையடுத்து, அவா் கட்சியின் மாநில பொதுச் செயலா் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்தும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்து, கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்லப் பெருந்தகைக்கு ராஜிநாமா கடிதம் அனுப்பினாா்.
தொடர்புடையது

குலசேகரத்தில் இன்று மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் பிரசாரம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

பழனிக்கு எத்தனை முறை பாஜக காவடி எடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது! - எம்.ஏ. பேபி

மல்லிகாா்ஜூன காா்கே, ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வருகை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


