முதுகுளத்தூா் பகுதியில் காணாமல் போய் மீட்கப்பட்ட கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளா்களிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் கைப்பேசிகள் காணாமல் போனது தொடா்பாக பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவற்றை மீட்டனா்.
இதைத் தொடா்ந்து அந்த கைப்பேசிகளை முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் ஆய்வாளா் இளையராஜா, உதவி ஆய்வாளா் முகிலரசன் ஆகியோா் முன்னிலையில் முதுகுளத்தூா் சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் சண்முகம், அவற்றின் உரிமையாளரிடம் ஒப்படைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










