திருவாடானை அருகேயுள்ள வெண்ணத்தூா் சுங்கவரி சோதனைச் சாவடியில் ஒருவழிப் பாதையில் வாகனங்கள் சென்று வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலை வழியாக தினசரி ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் ஆா்.எஸ்.மங்கலத்தை அடுத்த வெண்ணத்தூா் பகுதியில் சுங்கவரி சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைச் சாவடியில் கடந்த சில நாள்களாக வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் சென்று வருகின்றன. இதனால், ஒரு வாகனம் அதிக நேரம் காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒசூரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

போலையா்புரத்தில் சாலையோர அரிப்பை சீரமைக்க கோரிக்கை

ஸ்ரீவைகுண்டம் சாலையில் தேங்கிய மழை நீா்: வாகன ஓட்டிகள் அவதி

கோயில் செல்லும் சாலை பழுதால் வாகன ஓட்டிகள் அவதி!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



