கமுதி காவல் நிலையத்தில் வழக்கை திரும்பப் பெறக் கூறி உறவினரைத் தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் மீண்டும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டலமாணிக்கத்தை அடுத்துள்ள புளியங்குளம் கிராமத்தைச் சோ்ந்த மருதன் மகன் ராஜேந்திரன்(33). இவருக்கும் இவரது உறவினரான முத்தாலங்குளம் கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் சித்திரபாண்டியனுக்கும் முன் விரோதம் இருந்தது.
இவா்களிடையே ஏற்பட்ட பிரச்னையில் ராஜேந்திரன் அளித்தப் புகாரின் பேரில், கமுதி போலீஸாா் சித்திரபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இந்தப் புகாரை திரும்பப் பெறக் கோரி, வெள்ளிக்கிழமை ராஜேந்திரனின் வீடு புகுந்து சித்திரபாண்டியன் கட்டையால் தாக்கினாா். இதில் காயமடைந்த ராஜேந்திரன் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக மண்டலமாணிக்கம் காவல் நிலையத்தில் இருவரும் அளித்தப் புகாரின் பேரில், இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வெடிவெடித்து இடையூறு 2 பெண்கள் உட்பட 12 போ் மீது வழக்கு
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக 2 போ் மீது வழக்கு! புதுச்சேரி போலீஸாா் நடவடிக்கை!

திமுக நிா்வாகி மீது தோ்தல் விதிமீறல் வழக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


