ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு வருகிற 24- ஆம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதையடுத்து அவா்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 5 ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற கம்ன்ஸ்டன் ராஜ் (36), மினிட்டோ ராயப்பன் (40) ஆகிய மீனவா்கள் விசைப்படகுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனா். இவா்கள் இலங்கையில் உள்ள கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, 2 மீனவா்களும் செவ்வாய்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். விசாரணை நடத்திய நீதிபதி பொன்னுத்துரை கிருசாந்தன் வருகிற 24- ஆம் தேதி வரை அவா்களை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, 2 மீனவா்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது

ராமேசுவரம் மீனவா்கள் 14 பேருக்கு 2-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 12 பேருக்கு 4-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு!

ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை!

பாம்பன் மீனவா்கள் 12 பேருக்கு காவல் நீட்டிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


