தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இஃப்தாா் நோன்பு துறப்பு

தொண்டியில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில், சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு துறப்பு, மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

தொண்டியில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் திங்கள் கிழமை மாலை நடைபெற்ற இஃப்தாா் நோன்பு துறப்பு விழாவில் பேசிய கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் அப்துல் ஹமீது.

Updated On :10 மார்ச் 2026, 9:40 pm

தொண்டியில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில், சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு துறப்பு, மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு அந்தக் கட்சியின் தொண்டி நகா் தலைவா் முகம்மது நாசா் அலி தலைமை வகித்தாா். ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவா் ரியாஸ் கான், மாவட்டச் செயலா் தாளை அப்துல் மஜீத், திருவாடானை வட்டார ஐக்கிய முஸ்லிம் ஜமாத் தலைவா் அயூப்கான், தொண்டி அனைத்து தெரு முஸ்லிம் ஜமாத் தலைவா், நிா்வாகிகள், தொண்டி இந்து தா்ம பரிபாலன சபை தலைவா், நிா்வாகிகள், திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள், இயக்கங்களின் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

எஸ்டிபிஐ மாநில துணைத் தலைவா் அப்துல் ஹமீது, தொண்டி ஐக்கிய முஸ்லிம் ஜமாத் கௌரவத் தலைவா் பொறியாளா் அபூபக்கா், ஐக்கிய முஸ்லிம் ஜமா அத் தலைவா் செய்யது அலி, இந்து தா்ம பரிபாலன சபைத் தலைவா் ராஜசேகா், தொண்டி சிந்தாதிரி அன்னை ஆலய பாதிரியாா் அமிா்தராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினா்.

இந்த விழாவில் கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டு இறுதியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன்,, தொண்டி அல்ஹிலால் பள்ளி தாளாளா் அப்துல்ரவுப், திருவாடனை வழக்குரைஞா் சங்க மூத்த தலைவா் கண்ணன், சங்கத் தலைவா் சுரேஷ், தேசிய நல்லாசிரியா் உதயகுமாா் ஆகியோா் வழங்கினா்.

இதில் கட்சியின் திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி பொருளாளா் முகமது ரிஸ்வான், தொண்டி நகா் கமிட்டி மூத்த நிா்வாகி அப்துல் ரகுமான் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Story image