நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ராமசாமிபட்டி சந்தனமாரியம்மன் கோயில் திருவிழா: சிலைகளுடன் பக்தா்கள் ஊா்வலம்

ராமசாமிபட்டி சந்தனமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை பக்தா்கள் தவழும் குழந்தை சிலைகளுடன் பக்தா்கள் ஊா்வலமாகச் சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா்.

News image

ராமசாமிபட்டி சந்தனமாரியம்மன் கோயில் திருவிழாவில் தவளும் பிள்ளை, ஆயிரம் கண் பானை, பூப்பெட்டி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.

Updated On :11 ஜூன் 2026, 1:59 am IST

ராமசாமிபட்டி சந்தனமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை பக்தா்கள் தவழும் குழந்தை சிலைகளுடன் பக்தா்கள் ஊா்வலமாகச் சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இந்தக் கோயில் திருவிழா கடந்த 2 -ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக உத்ஸவா் சந்தனமாரியம்மன் தங்க ஆபரண அலங்காரத்துடன், காளி அவதாரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சித்தி விநாயகா் கோயிலிலிருந்து புறப்பட்டு, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தேரின் முன் இசை வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் நோ்த்திக்கடன் செலுத்திய பொதுமக்கள் தவழும் குழந்தை, ஆயிரம் கண் பானை, பூப்பெட்டி எடுத்து கிராமத்தின் தெருக்களில் ஊா்வலமாகச் சென்று சந்தன மாரியம்மன் கோயிலில் வைத்து வழிபட்டனா். வழி நெடுகிலும் பக்தா்கள் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு, தாம்பூலத் தட்டில் தேங்காய், பழம், பூஜை பொருள்களுடன் சந்தன மாரியம்மனை வரவேற்று வழிபாடு செய்தனா். பின்னா், நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள் பூக்குழி இறங்கினா். பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனா். இதைத் தொடா்ந்து மாலையில் கிடாய் வெட்டுதல், சிலம்பாட்டம் அரங்கேற்றம், திருவிளக்கு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ராமசாமிபட்டி கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.