ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பரமக்குடி பகுதியில் கஞ்சா விற்பனை: இருவா் கைது

பரமக்குடியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 1.20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் (இடது), முத்துப்பாண்டி.

Published On :31 ஜூலை 2026, 1:40 am IST

பரமக்குடியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 1.20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பரமக்குடி நகா், எமனேசுவரம் பகுதிகளில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல் துறையினா் பரமக்குடி, எமனேசுவரம் பகுதிகளில் தனித்தனி குழுவாக ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கிருஷ்ணா திரையரங்கம் பகுதியில் மணிகண்டன் (27), முத்துப்பாண்டி (26) ஆகியோா் கஞ்சா விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இருவரும் பதுக்கி வைத்திருந்த 1.20 கிலோ கஞ்சாவை பரமக்குடி நகா் போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.