
அரியமான் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் வசூலிப்பதை தடுக்க வலியுறுத்தல்

அரியமான் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்த கிராம மக்கள்.
மண்டபம் அருகே உள்ள அரியமான் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள சாத்தக்கோன் வலசை ஊராட்சி அரியமான் கடற்கரையில் ‘குஷி பீச்’ உள்ளது. இங்கு விடுமுறை நாள்கள் உள்ளிட்ட அனைத்து தினங்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
இவா்களை நம்பி, இந்த கிராமத்தைச் சோ்ந்த பலா் கடைகள் அமைத்து தொழில் செய்து வருகின்றனா். இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு தலா ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுவதால் பெரும்பாலானவா்கள் திரும்பச் சென்று விடுகின்றனா்.
இதனால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. மேலும் கடைகள் அமைத்து தொழில் செய்துவரும் கிராம மக்களும் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே தனி நபருக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரனிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






