ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொண்டி அருகே 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது

தொண்டி அருகே கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

தொண்டி அருகேயுள்ள முள்ளிமுனை கிராமத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள். கைது செய்யப்பட்ட டேனியல், கடற்கரை போலீஸாா்.

Published On :23 ஜூலை 2026, 6:01 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

தொண்டியை அடுத்த முள்ளிமுனை கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டைகளில் கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தொண்டி கடற்கரை குழும் போலீஸாருக்கு புதன்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடலோர குழும போலீஸாா் அங்கு விரைந்து சென்று சோதனையிட்டனா். அப்போது, 15 சாக்கு மூட்டைகளில் சுமாா் 250 கிலோ கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கடலோரக் குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, கண்கொள்ளான்பட்டினத்தைச் சோ்ந்த டேனியல் (36) கடல் அட்டைகளை பதுக்கியது தெரியவந்தது.

இதுதொடா்பாக, போலீஸாா் அவரைக் கைது செய்து, 250 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.