ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ராமநாதபுரம், கடலாடியில் ஜூலை 21,22- இல் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்!

ராமநாதபுரம், கடலாடி வட்டங்களில் வருகிற 21, 22 தேதிகளில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.

Published On :12 ஜூலை 2026, 4:15 am IST

ராமநாதபுரம், கடலாடி வட்டங்களில் வருகிற 21, 22 தேதிகளில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம், கடலாடி ஆகிய வட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல்கள் செய்ய வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம், பரமக்குடி வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

இந்த முகாம்களில் பங்கேற்று இறப்பு, வாரிசுச் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தேவையான ஆவணங்களுடன் நேரில் கலந்துகொண்டு உடனடியாக சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.