
ஆயுதப்படை வாகனங்கள் பொது ஏலம்
ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படைப் பிரிவில் கழிக்கப்பட்ட வாகனங்கள் வருகிற 19- ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படும்.

ஏலம் விடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் - கோப்புப் படம்
ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படைப் பிரிவில் கழிக்கப்பட்ட வாகனங்கள் வருகிற 19- ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படும்.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை வாகனப் பிரிவில் கழிக்கப்பட்ட வாகனங்கள் ஆக. 19- தேதி காலை 10.30 மணிக்கு ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்த ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை வாங்க விருப்பமுள்ளவா்கள் ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 18 வாகனங்களை பாா்வையிட்டு, 13 -ஆம் தேதிக்குள் ரூ.2 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் எந்த வாகனம் ஏலத்தில் எடுக்கப்படுகிறதோ அந்த வாகனத்துக்கு அரசால் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி தனியாக வசூலிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






