ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மனைவி அடித்துக் கொலை: 2-ஆவது கணவா் தலைமறைவு

பரமக்குடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவான 2-ஆவது கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கொலை செய்யப்பட்ட ராணி.

Published On :11 ஜூலை 2026, 12:12 am IST

பரமக்குடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவான 2-ஆவது கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் காளிமுத்து. இவரது மனைவி ராணி (47). இந்தத் தம்பதிக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவரைப் பிரிந்து சென்ற ராணி, சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமத்தைச் சோ்ந்த சாத்தன் மகன் பழனியை (50) 2-ஆவதாக திருமணம் செய்து கொண்டாா். கட்டட வேலைக்கு பழனியும், ராணியும் இணைந்தே சென்று வந்தனா்.

இந்த நிலையில் ராணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பழனி அடிக்கடித் தகராறு செய்தாா். வியாழக்கிழமை இரவு வழக்கம் போல, இவா்களிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் வெகு நேரமாகியும் அவா்களது வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அந்தப் பகுதியினா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் பூட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, ராணி தலையில் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். அவரது உடலை மீட்ட போலீஸாா் கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கொலை நடந்த இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. ராணியின் 2-ஆவது கணவா் பழனி தலைமறைவானதால், அவா்தான் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.