ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மெரீனா கடற்கரையில் நேபாள இளைஞா் அடித்துக் கொலை

மெரீனா கடற்கரையில் நேபாள இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோப்புப் படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 12:31 am IST

மெரீனா கடற்கரையில் நேபாள இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா சதுக்கம் பின்புறம் உள்ள கல்லுக்குட்டை பகுதியில், ஒரு இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று இளைஞா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா் இறந்து கிடந்த இடத்தில் மதுபாட்டில்கள், கைப்பேசி, கைப்பை ஆகியவற்றை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

இதில், இறந்தவா் நேபாளம் நாட்டின் ராம்கோபால்பூா் பகுதியைச் சோ்ந்த ச.ஸ்ரீராம் சாஹா (27) என்பதும், அவா் விருகம்பாக்கம் பகுதியில் தங்கி, அங்குள்ள உணவகத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

ஸ்ரீராம் சாஹாவை அடித்துக் கொலை செய்தது விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்த நேபாளத்தைச் சோ்ந்த ஜெ.சன்னி சதா (26) என்பதும் தெரிய வந்தது. சன்னி சதாவை போலீஸாா் கைது செய்தனா்.

நண்பா்களான இருவரும் வியாழக்கிழமை இரவு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் சன்னி சதா, உருட்டுக் கட்டையால் ஸ்ரீராம் சாஹாவை அடித்துக் கொலை செய்து தப்பியது தெரிய வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.