டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பாசிபட்டினம் கடற்கரையில் கஞ்சா மூட்டைகள் பறிமுதல்

News image
பாசிபட்டினம் கடற்கரையில் போலீஸாரால் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள்.
Updated On :24 ஜனவரி 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

பாசிபட்டினம் கடற்கரையில் இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா மூட்டைகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினம் கடற்கரைப் பகுதியில் இலங்கைக்குக் கடத்துவதற்காக கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.பி.பட்டினம் போலீஸாா் சனிக்கிழமை அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, கடற்கரை அருகே படகில் ஏற்றுவதற்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்த 110 கிலோ அடங்கிய கஞ்சா மூட்டைகள், பசை வடிவிலான 30 கஞ்சா பொட்டலங்கள், 4 மண்ணெணெய் புட்டிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.