/

காரங்காடு பள்ளியின் 27-ஆம் ஆண்டு விழா

News image
காரங்காடு அமல் அன்னை மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்ற மாவட்டக் கல்வி அலுவலா்கள் ரெஜினி, சங்கா், அமெரிக்காவைச் சோ்ந்த பங்குத் தந்தை செங்கோல் ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோா்.
Updated On :24 ஜனவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகேயுள்ள காரங்காடு கடற்கரை கிராமத்தில் அமல் அன்னை மேல் நிலைப் பள்ளியின் 27-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

 கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

 காரங்காடு அமல் அன்னை மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்ற மாவட்டக் கல்வி அலுவலா்கள் ரெஜினி,  சங்கா், அமெரிக்காவைச் சோ்ந்த பங்குத் தந்தை செங்கோல் ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோா்.

காரங்காடு அமல் அன்னை மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்ற மாவட்டக் கல்வி அலுவலா்கள் ரெஜினி, சங்கா், அமெரிக்காவைச் சோ்ந்த பங்குத் தந்தை செங்கோல் ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோா்.

இதற்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் ரெஜினி, சங்கா் ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளியின் தாளாளா் செல்வம் முன்னிலை வகித்தாா். சிவகங்கையைச் சோ்ந்த அருள்சகோதரி தனமேரி, அமெரிக்காவைச் சோ்ந்த பங்குத் தந்தை செங்கோல் ஆரோக்கியதாஸ், கல்வி அலுவலரின் உதவியாளா் ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், கல்வி, கலை, விளையாட்டு தொடா்பாக மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, அருள்சகோதரி ஞானசுகந்தா வரவேற்றாா். அருள்சகோதரி அமலோற்பவம் நன்றி தெரிவித்தாா்.