/

சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது

கடலாடி பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 17 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

News image
கைது
Updated On :3 பிப்ரவரி 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

கடலாடி பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 17 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, ஆப்பனூா் உள்ளிட்ட பகுதிகளில் கடலாடி காவல் ஆய்வாளா் சாகுல்ஹமீது தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சாமியாடி கொட்டகையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்றது தெரியவந்தது.

இதையடுத்து, மது விற்பனையில் ஈடுபட்டதாக அழகுலட்சுமியை (51) போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 17 மதுப் புட்டிகள், ரூ.3,300-யை பறிமுதல் செய்தனா்.