ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இருசக்கர வாகனங்கள் மோதல்: பெண் உயிரிழப்பு

உயிரிழப்பு - DPS

Published On :4 ஆகஸ்ட் 2026, 12:06 am IST

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டாா் சைக்கிளிலிருந்து நிலைதவறி விழுந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே வல்லமடை பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி மனைவி செல்வராணி (45). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது கணவா் அந்தோணியுடன் மோட்டாா் சைக்கிளில் ராமநாதபுரம் சென்று விட்டு இரவு ஊருக்குத் திரும்பினாா்.

ஆா்.எஸ்.மங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பின்னால் அமா்ந்து இருந்த செல்வராணி பலத்த காயமடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆா்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சோ்த்தபோது அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், செல்வராணி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து, தகவலறிந்த ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் அங்கு வந்து சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.