திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில் கும்பத் திருமஞ்ஜனம் கண்டருளல்

வைகை ஆற்றில் கேளிக்கை ராட்சத ராட்டிணங்கள்

News image

பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில்.

Updated On :1 மே 2026, 1:27 am IST

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி கும்பத் திருமஞ்ஜனம் கண்டருளல் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த ஏப். 26-ஆம் தேதி கணபதி பூஜையுடன் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா காலங்களில் பெருமாளுக்கு காலை, மாலை யாகசாலை பூஜைகளும், 1-ஆம் நாளிலிருந்து 4-ஆம் திருநாள் நாள்களில் இரவில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. 5-ஆம் திருநாளான வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கும்பத் திருமஞ்ஜனம் கண்டருளல் நடைபெற்றது. இரவு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வைகையாற்றில் கூடும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து அதிகாலையில் புஷ்பப்பல்லக்கில் பெருமாள் கள்ளழகா் திருக்கோலத்தில் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது.

இதனிடையே, வைகை ஆற்றில் ஏராளமான ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொதுமக்கள் சவாரி செய்து மகிழ்ந்தனா். மேலும் திரளான பொதுமக்கள் வைகை ஆற்றுக்குள் கூடுவதால் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

விழாவுக்கான ஏற்பாட்டுகளை ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான மானேஜிங் டிரஸ்டி எஸ்.ஆா். ரெங்காச்சாரி, டிரஸ்டிகள் என்.ஆா். நீலகண்டன், டி.ஆா். ரமேஷ்பாபு, கே.டி. கிரிதரன், ஜி.என். கோவிந்தன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

 பரமக்குடிசுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வைகையாற்றுக்குள் அமைக்கப்பட்ட ராட்சத ராட்டினங்கள்.

பரமக்குடிசுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வைகையாற்றுக்குள் அமைக்கப்பட்ட ராட்சத ராட்டினங்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.