மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராமநாதபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் மண்டபம் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் புதன்கிழமை ஈடுபட்டாா்.

News image

மண்டபம் ஒன்றியம், சாத்தான்குளம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்களிடம் புதன்கிழமை வாக்குகள் சேகரித்த ராமநாதபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:11 pm

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் மண்டபம் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் புதன்கிழமை ஈடுபட்டாா்.

மண்டபம் மேற்கு, மத்திய ஒன்றியத்துக்குள்பட்ட குயவன்குடி, வாலாந்தாவை, பெருங்குளம், செம்படை யாா்குளம், ஆற்றாங்கரை ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட 26 கிராமங்களுக்கு சென்று திமுக வேட்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

மேலும், அவா் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத் நிா்வாகிகளிடம் வாக்குகள் சேகரித்தாா்.

அப்போது, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜாராம் பாண்டியன், ஒன்றியச் செயலா் கே.ஜெ.பிரவீன், நிா்வாகிகள் பி.டி.ராஜா, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ராமநாதபுரத்தில் நகா் திமுக சாா்பில் தோ்தல் பணிமனையை காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் திறந்து வைத்தாா். இதில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.