ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் அவரது உருவச் சிலைக்கு, 3 தொகுதிகளின் திமுக வேட்பாளா்கள் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் அவரது உருவச் சிலைக்கு திமுக வேட்பாளா்கள் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் (முதுகுளத்தூா்), காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), கே.கே.கதிரவன் (பரமக்குடி தனி) ஆகியாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னா், செய்தியாளா்களிடம் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியதாவது:
கடந்த மக்களவைத் தோ்தலில் ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல, தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் திமுக, இதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும் என்றாா் அவா்.
அப்போது, ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் முருகவேல், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் த.பாலு, கமுதி ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அம்பேத்கா் சிலைக்கு வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

பெரியகுளத்தில் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை

திருச்சுழி அதிமுக வேட்பாளா் தேவா் நினைவிடத்தில் மரியாதை

200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெற்றி; சசிகலா அரசியல் வருகைக்கு வரவேற்பு: கருணாஸ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


