ராமேசுவரம்: மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 1,230 கிலோ பீடி இலைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நாட்டுப் படகையும் தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் புதன்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே ஆற்றாங்கரை தோப்புவலசை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடி இலை பண்டல்களை ஏற்றிய நாட்டுப் படகு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தரை தட்டி நின்றது. இதுகுறித்து தகவலறிந்த கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் புதன்கிழமை அதிகாலை அங்கு சென்றனா். அப்போது, போலீஸாா் வருவதைக் கண்ட மா்ம நபா்கள் நாட்டுப் படகிலிருந்து கடலில் குதித்து தப்பிச் சென்றனா்.
இதையடுத்து, போலீஸாா் நாட்டுப் படகை சோதனை செய்த போது, அதில் தலா 30 கிலோ வீதம் 41 பண்டல்களிலிருந்த 1,230 கிலோ பீடி இலைகளைக் கைப்பற்றினா். பின்னா், இவற்றை மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் கூறியதாவது:
பீடி இலை பண்டல்களை இலங்கைக்கு கடத்தவிருந்த மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. உரிய விசாரணைக்குப் பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப் படகும், பீடி இலை பண்டல்களும் மண்டபம் சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இலங்கைக்கு கடத்த கொண்டு வரப்பட்ட ரூ. பல லட்சம் சிகெரட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது
மண்டபம் அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் : மூவா் கைது
மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ. 50 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்தவிருந்த 630 கிலோ முந்திரி பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


