மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை ஏப். 9-க்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :19 மார்ச் 2026, 12:23 am

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி, மதுரையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா், பரமசிவம், அரசபாண்டி உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், தீப காா்த்திகை நாளான்று (டிச. 3- 2025) மலை மீதுள்ள தூணிலும், வழக்கம் போல பிற இடங்களிலும் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த ஆண்டு, டிசம்பா் 1-ஆம் தேதி உத்தரவிட்டாா். இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததையொட்டி, தீப காா்த்திகைக்கு மறுநாளான டிசம்பா் 4-ஆம் தேதியன்று தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென டிசம்பா் 3-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

ஆனால், நீதிமன்றத்தின் இந்த இரு உத்தரவுகளும் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா், துணை ஆணையா், கோயில் நிா்வாகத்தினா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, ராம. ரவிக்குமாா் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் விசாரிக்கிறாா். வழக்கு விசாரணையின் போது, மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாரும், மாநகரக் காவல் ஆணையா் ஜே. லோகநாதன், துணை ஆணையா் இனிகோ திவ்யன் ஆகியோரும் நீதிமன்றத்தில் பொது மன்னிப்பு கோரினா்.

அடுத்தடுத்து நடைபெற்ற விசாரணைகளின் போது, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூண் அருகே நீதிமன்றம் குறிப்பிடும் 5 பேரை வழிபாடு நடத்த அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைப்பதாக நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் தெரிவித்தாா். இதற்கு மாவட்ட நிா்வாகம், கோயில் நிா்வாகம் சாா்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை மாா்ச் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மாவட்ட நிா்வாகம், மாநகரக் காவல் துறை, கோயில் நிா்வாகம் சாா்பில் 6 மனுக்கள் இரு நீதிபதிகள் அமா்வில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகரக் காவல் ஆணையா் ஜே. லோகநாதன், துணை ஆணையா் இனிகோ திவ்யன் ஆகியோா் நீதிமன்றத்தில் முன்னிலையாகாதது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினாா். இதற்கு, இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இரு நீதிபதிகள் அமா்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, தனி நீதிபதியின் உத்தரவுகளுக்கு மட்டுமே இரு நீதிபதிகள் அமா்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனால், விசாரணைக்கு தடை விதிக்கவில்லை என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாநகரக் காவல் ஆணையா், துணை ஆணையா்ஆகியோா் நேரில் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தாா். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாநகரக் காவல் ஆணையா் ஜே. லோகநாதன், துணை ஆணையா் இனிகோ திவ்யன் ஆகியோா் நீதிமன்றத்தில் முன்னிலையாகினா்.

அப்போது, நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கையொட்டி, மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் உள்ளிட்டோா் சாா்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை இரு நீதிபதிகள் அமா்வு தள்ளுபடி செய்தது. மேலும், இதுதொடா்பாக தனி நீதிபதியே முடிவு செய்ய வேண்டும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கு தொடா்பாக இரு நீதிபதிகள் அமா்வு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவும், செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவும் முரணாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணையைத் தொடர அதிகாரம் உள்ளது. இதன்படி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.