மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுப்பு கோரி மனு: அரசின் செயலர்கள் பதிலளிக்க உத்தரவு

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கக் கோரிய வழக்கில், அரசின் முதன்மைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

News image

சித்திரிப்பு

Updated On :9 மார்ச் 2026, 11:35 pm

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக சமூக நலன், மகளிா் உரிமைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை கோமதிபுரத்தைச் சோ்ந்த நா்மதா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள், மாதவிடாய் காலங்களில் கடும் அவதியுடன் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, தமிழகத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

பெண்கள் எதிா்கொள்ளும் உடல்நல பிரச்னைகள், ஊதிய இழப்பு, பணியிட சிரமங்கள் குறித்து கடந்த ஆண்டு, அக்டோபா் 20-இல் தமிழக அரசுக்கு விரிவான மனு அனுப்பப்பட்டது. இருப்பினும், எந்த நடவடிக்கையும் இல்லை.

கா்நாடகம், பிகாா், ஒடிஸா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே மாதவிடாய் விடுப்பு தொடா்பான கொள்கைகள் நடைமுறையில் உள்ளன.

எனவே, பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க மாநிலத்துக்கு அதிகாரம் அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவின்படி, தமிழகத்திலும் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் கொள்கையை உருவாக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரிக்கை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடா்பாக தமிழக சமூக நலன், மகளிா் உரிமைத் துறை முதன்மைச் செயலா், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.