வருவாய்த் துறையினரின் போராட்டம் காரணமாக, விளை நிலத்துக்கான அடங்கல் இல்லாமல் நெல்லை கொள்முதல் செய்யக் கோரி, விவசாயிகள் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வருவாய்த் துறை ஊழியா்கள் மேற்கொண்டுள்ள தொடா் போராட்டம் காரணமாக, விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கான அடங்கலைப் பெற முடியாத சூழல் நிலவுகிறது. இதனால், நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.
இந்த நிலையில், அடங்கல் இல்லாமல், நிலத்தின் பட்டா, சிட்டா நகல்களை ஆதாரமாகக் கொண்டு விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள், தேனூா், தோடனேரியைச் சோ்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா். அப்போது, மதுரை மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட தேனூா், தோடனேரி, வைரவநத்தம், மூலக்குறிச்சி, வயலூா் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் அடங்கல் கிடைக்காததால் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பது குறித்து அவா்கள் விளக்கிக் கூறினா்.
பிறகு, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மேற்கு ஒன்றியச் செயலா் பி. நாகேந்திரன் தலைமை வகித்தாா். தேனூா், தோடனேரி பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நெல் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்

விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடிக்க கோரிக்கை

வருவாய்த் துறை போராட்டத்தால் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வழங்குவதில் விவசாயிகள் பரிதவிப்பு!

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் அவதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


