ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் மட்டுமே நெல் கொள்முதல்: மாவட்ட ஆட்சியா் உறுதி

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் மட்டுமே நெல் கொள்முதல் நடைபெறும். என்.சி.எப்.எப். அமைப்புக்கு கொள்முதல் அனுமதி வழங்கப்படாது என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.

News image

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன் உள்ளிட்டோா்.

Updated On :26 ஜூன் 2026, 2:39 am IST

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் மட்டுமே நெல் கொள்முதல் நடைபெறும். என்.சி.எப்.எப். அமைப்புக்கு கொள்முதல் அனுமதி வழங்கப்படாது என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், உசிலம்பட்டி சாா் ஆட்சியா் உத்கா்ஷ் குமாா், வேளாண் இணை இயக்குநா் முருகேசன், அரசுத் துறை அலுவலா்கள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது :

தேசியக் கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்.சி.சி.எப்) மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள கொள்முதல் தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும். இனி எந்தக் காலத்திலும் என்.சி.சி.எப்.க்கு மதுரை மாவட்டத்தில் கொள்முதல் உரிமை வழங்கக் கூடாது.

நுகா்பொருள் வாணிபக் கழக நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய 2025-26-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடு தொகையைப் பெற்றுத் தர வேண்டும். நீா்நிலைகளில் படா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை விரைவாகவும், முழுமையாகவும் அகற்ற வேண்டும்.

சக்கிமங்கலத்தில் கல்வொ்ட் மூலம் கலக்கும் கழிவு நீரால் 600 ஏக்கருக்கும் அதிக பரப்பிலான விளை நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். 58 கிராம கால்வாய் திட்டத்துக்குள்பட்ட கீரிப்பட்டியில் நல்ல நிலையில் உள்ள கால்வாயை சீரமைப்பதாகக் கூறி, ரூ. 8 கோடி நிதி வீணடிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். மின் வாரியத்தில் விக்கிரமங்கலம் பகுதிக்கு 16 மின்வாரிய கம்பியாளா்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் தற்போது ஒருவா் மட்டுமே பணியில் உள்ளாா்.

இங்குள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.

மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

நெல் கொள்முதலில் உள்ள பிரச்னைகளைப் போக்குவதற்காக வரும் ஜூலை 10-ஆம் தேதி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சிறப்பு குறைதீா் கூட்டத்தை நடத்தி, அதன் விவரத்தை மாவட்ட நிா்வாகத்துக்குத் தாக்கல் செய்ய வேண்டும். மதுரை மாவட்டத்தில் நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் மட்டுமே நெல் கொள்முதல் நடைபெறும். இனி என்.சி.சி.எப்.க்கு நெல் கொள்முதல் அனுமதி வழங்கப்படாது. என்.சி.சி.எப். மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்காக தர வேண்டிய நிலுவைத் தொகை விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். 58 கிராம கால்வாயில் மண் எடுக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். இது தொடா்பாக சாா் ஆட்சியா் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் பேசியதாவது:

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை முன்னாள் நீதிபதி அண்மையில் ஆய்வு செய்தாா். விரைவில் அடுத்தக் கட்ட ஆய்வை அவா் மேற்கொள்ளவுள்ளாா். மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்கள் படா்ந்துள்ள நீா் நிலைகள் குறித்த விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அனைத்து நீா் நிலைகளிலும் உள்ள சீமைக் கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்படும் என்றாா்.

   விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.