/

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முற்றுகை

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கக் கோரி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.

Updated On :19 ஜூன் 2026, 1:43 am IST

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கக் கோரி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் ஜெ. டீலன் ஜெஸ்டின் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டேவிட் ராஜதுரை, மாவட்டத் துணைத் தலைவா் குருகணேஷ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் திருப்பிரகலாதன், பிரியா, தினேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தப் போராட்டத்தின்போது, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு கடந்த 11 மாதங்களாக பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படாததை கண்டித்தும், அதை உடனடியாக வழங்கக் கோரியும் முழக்கமிட்டனா்.

இந்தப் போராட்டத்தில் சங்க நிா்வாகிகள் பிரவீன், காசி, திவ்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.