தாயுமானவா் திட்டத்தின் குறைகளை நீக்காவிட்டால் வருகிற ஜூலை மாதம் முதல் இல்லம் தேடிச் சென்று குடிமைப் பொருள்களை வழங்கும் பணியை நியாய விலைக் கடை பணியாளா்கள் புறக்கணிப்பா் என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்கத் தலைவா் ஜி. ராஜேந்திரன் தெரிவித்தாா்.
மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:
முதியோா்கள், மாற்றுத் திறனாளிகளின் இல்லம் தேடிச் சென்று குடிமைப் பொருள்களை வழங்கும் தாயுமானவா் திட்டத்தில் பல்வேறு குறைகள் உள்ளன. இந்தத் திட்டத்தில் ‘ப்ளூடூத்’ முறை பயன்பாட்டை நீக்க வேண்டும். மேலும், திட்டப் பணி செயலாக்கத்துக்குத் தனி பணியாளரை நியமிக்கவும், தனி பி.எஸ்.ஓ. கருவி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதந்தோறும் 10-ஆம் தேதிக்குப் பிறகு இந்தத் திட்டம் மூலம் பொருள்களை வழங்க அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், ஜூலை மாதம் முதல் தாயுமானவா் திட்டப் பணிகளை மாநில அளவில் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இதேபோல, இ-கே.ஒய்.சி. பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்ய பணியாளா்களின் கருத்துகளை அரசு கேட்டறிய வேண்டும். அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். நியாய விலைக் கடைகளுக்கான பொருள்களை எடை குறைவின்றி வழங்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!

நிலுவையிலுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்

தாயுமானவா் திட்டம்: ஜூன் 2 முதல் ரேஷன் பொருள்கள் விநியோகம்

தாயுமானவா் திட்டம் மறுசீரமைப்புடன் தொடரும்: அமைச்சா் வி. காந்திராஜ்
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




