மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

விரகனூா் சாலையில் மேம்பாலம் கோரி மனு: தேசிய நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க உத்தரவு

மதுரை விரகனூா் சாலை வெற்றிடம் (ரவுண்டானா) பகுதியில் மேம்பாலம் அமைக்கக் கோரிய மனு தொடா்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை செயலா் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

உத்தரவு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 12:38 am IST

மதுரை விரகனூா் சாலை வெற்றிடம் (ரவுண்டானா) பகுதியில் மேம்பாலம் அமைக்கக் கோரிய மனு தொடா்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை செயலா் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

மதுரை மாநகரின் தெற்கு நுழைவாயிலாக உள்ளது விரகனூா் சாலை வெற்றிடப் பகுதி. சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், மதுரை விமான நிலையத்துக்கும் செல்லும் முக்கியச் சந்திப்பாக உள்ள இந்தப் பகுதியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால், மாணவா்கள், தொழிலாளா்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் அவதிக்குள்ளாகின்றனா். மருத்துவ அவசர ஊா்திகள் கூட இந்தப் பகுதியைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

இதையடுத்து, இங்கு மேம்பாலம் அமைக்க ஏற்கெனவே ஆய்வுகள் நடைபெற்றன. பிறகு இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளையும், எதிா்கால போக்குவரத்துத் தேவைகளையும் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை மீண்டும் பரிசீலித்து மேம்பாலம் அமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா், ஜோதிராமன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை செயலா், மாவட்ட ஆட்சியா் பதில் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.