
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.48 கோடி
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இதன் துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.48 கோடி கிடைத்தது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் - கோப்புப் படம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இதன் துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.48 கோடி கிடைத்தது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இதன் 10 துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி கோயில் செயல் அலுவலரும், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருமான க. செல்லத்துரை தலைமையிலும், உதவி ஆணையா் இரா. முத்துராமலிங்கம் முன்னிலையிலும் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ரொக்கமாக ரூ. 1.48 கோடியும், பலமாற்று பொன் இனங்கள் 295 கிராமும், பலமாற்று வெள்ளி இனங்கள் 980 கிராமும், வெளிநாட்டு பணத்தாள்கள் 390-ம் காணிக்கையாகக் கிடைக்கப் பெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




