சிறந்த ஜல்லிக்கட்டு வீரா்களுக்கு அரசுப் பணி: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக மாடுகளைப் பிடிக்கும் சிறந்த வீரா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடைப் பராமரிப்புத் துறையில் அரசுப் பணி வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா்.











